சுன்னாகத்தில் பொலிசாருக்கே சவால் விடும் திருடர்கள்

குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக சுன்னாகம் பொலிஸார் கடந்த new-Gif1வெள்ளிக்கிழமை  நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்த சில மணி நேரத்திலேயே சுன்னாகம் பகுதியில் சுமார் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப் படுகின்றது.

சுன்னாகம் தெற்கு மூர்தியான் கூடல் பகுதியில் ஒரு தாலிக்கொடியும், சங்கிலியும், கந்தரோடை கற்பொக்கனைப் பகுதியில் ஒரு தாலிக்கொடி, உடுவில் கீழிச்சந்தைப் பகுதியில் ஒரு சங்கிலி ஒன்றும் பிற்பகல் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையில் அறுத்துச் செல்லப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பொதுமக்கள் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் ரவுடிகள், திருடர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கியிருந்த நிலையில் விசேட அதிரடிப் பொலிஸாரைப் பயன்படுத்தி ரவுடிகளின் அட்டகாசத்தை நிறுத்துமாறு  நீதிமன்று  பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குப் பணித்திருந்தது. அதையடுத்து அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டுக்கள், அடி பிடிகளை நிறுத்தியவர்கள் தற்போது வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஏழாலைப் பகுதயில் இரண்டு ஆடுகள் திருடப்பட்டுள்ளன. இவைகள் யாவும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளன.

பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள், கண்காணிப்புக்கள் நீதி மன்றப் பணிப்புரைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றமை தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.photo-GIF-MAVEERARGif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*