வடக்கில் இந்த வருடம் சகலவிதமான துஸ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளது.

கடந்த வருடங்களை விட இந்த வருடம் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவர்களின் எண்ணிக்கைnew-Gif1 குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலக சிறுவர் அபிவிருத்தி அலுவலகத்தின் புள்ளி விபரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

அந்தவகையில், கடந்த ஆறு மாதங்களில் பதுமை வயது திருமணம், கர்ப்பம் தரித்தல், சிறுவர் தொழிலாளர்கள், பாடசாலை இடை விலகிய மாணவர்களின் எண்ணிக்கை போன்றவை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரத்தில் இருந்து தெரியவருகின்றது.

2013ஆம் ஆண்டு, 123 மாணவர்களும், 2014ஆம் ஆண்டு 196 மாணவர்களும், 2015ஆம் ஆண்டு 39 மாணவர்களும் பாடசாலையில் இருந்து இடைவிலகியுள்ளனர்.

சிறுவர் தொழிலாளர்கள் 2013ஆம் ஆண்டு 54 பேரும், 2014ஆம் ஆண்டு 50 பேரும், 2015ஆம் ஆண்டு 13 பேரும் சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

பதுமை வயது திருமணம் மற்றும் கர்ப்பம் தரித்தல் 2013ஆம் ஆண்டு 104 பேரும், 2014ஆம் ஆண்டு 83 பேரும், 2015ஆம் ஆண்டு 29 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

அந்தவகையில், சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள் 2013ஆம் ஆண்டு 71, 2014ஆம் ஆண்டு 69 சிறுவர் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை இவ்வாண்டு 27ஆக குறைவடைந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்தி அலவலக புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, குறைவாக காணப்பட்டாலும், இந்த வருடம் மிக பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் இளவயது கர்ப்பம் தரித்தல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*