யாழ் நீர்வேலியில் சிறப்புற இடம்பெற்ற சப்பர வெள்ளோட்டம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட 33 அடி உயர இரட்டைவாசல் new-Gif1சப்பரத்தின் வெள்ளோட்ட விழா 25.09.2015 வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
வெள்ளோட்ட நிகழ்வைத் தொடர்ந்து ‘நீர்வைக்கிழார்’ ச.லலீசன் தலைமையில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆலயப் பிரதம குரு வண. சா.சோமதேவக்குருக்கள், நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு வண. ஆ.சந்திரசேகரக் குருக்கள், நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்கள் ஆகியோர் ஆசியுரைகளையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞர்னசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் வழங்கினர்.
. ஆலய பரிபாலன சபைத் தலைவர் தொழிலதிபர் க.கிருபாகரன் தொடக்கவுரையாற்றினார். சப்பர உபயகாரரும் கணக்காளருமாகிய மாணிக்கவாசகர் திருவாசகம் நிறைவுரையாற்றினார். ஆலயப் பொருளாளர் ச.க.முருகையா நன்றியுரை ஆற்றினார்.
சப்பரத்தை நிர்மாணித்த சுன்னாகம் ஐங்கரன் கலாலய அதிபர் சிவலோகநாதன் ஐங்கரன் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துப்பத்திரம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். 01(1) 02 03 04(1) 05Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*