ஜான்வி மம்முட்டி மகனுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்

மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் ’வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் new-Gif1அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் துல்கர், அடுத்ததாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஒரு படத்தை தாராரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க பொருத்தமான புதுமுகத்தை தேடி வந்த நிலையில்…

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியை இதில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தனர். ஜான்வியிடம் விஜயேந்திர பிரசாத் கதையை சொன்ன பிறகு அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதால் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.222

ஸ்ரீதேவியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஜான்வியை படத்தில் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் முயற்சி செய்தனர். அமலாவின் மகன் அகில் ஜோடியாக நடிக்க வைக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்க ஜான்வி ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது மம்முட்டி மகனுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துல்கர் சல்மான் – ஜான்வி ஜோடி நடிக்கும் படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளிலும் தயாரிக்க விஜயேந்திரபிரசாத் திட்டமிட்டு இருக்கிறார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*