ஆவரங்கால் பகுதியில் மினிவானும் லொறி மோதி 32 பேர் காயம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் பகுதியில் பயணிகளை ஏற்றி வந்த மினிவானும் new-Gif1லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மினிவானும் யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் மினிவானில் 40 பேர் பயணித்தனர் எனவும் இதில் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 3 சிறார்கள் உட்பட  11ஆண்களும், 21 பெண்களுமாக 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்த போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*