LG புதிய ஸ்மார்ட் கைப்பேசி 21 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள LG new-Gif1நிறுவனமானது LG Class எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 21 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*