ஹேரத்தின் ‘மந்திர சுழல் ஜாலத்தில்’ இந்திய அணி சுருள 63 ஓட்டங்களால் வெற்றி

ஹேரத்தின் ‘மந்திர சுழல் ஜாலத்தில்’ இந்திய அணி சுருள 63 ஓட்டங்களால் new-Gif1வெற்றி பெற்றது இலங்கை அணி.

இலங்கை வந்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை காலியில் தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மத்தியூஸ் 64, சந்திமால் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

ஹேரத்தின் 'சுழல் ஜாலத்தில்' சுருண்டது இந்திய அணி

இந்திய அணியின் பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு தவான், கோலி ஜோடி வலுவான இணைப்பாட்டத்தை வழங்கியது. இருவரும் சதம் கடந்து அசத்த முதல் இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 375 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் தவான் 134, கோலி 103, சகா 60 ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் கௌசல் 5, நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரண்டாவது இனிங்ஸில் இலங்கை அணி தனது வழமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியது. சந்திமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 169 ஓட்டங்களைக் குவித்தார்.

சங்ககார 40, திரிமன்னே 44, முபாரக் 49 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாவது இனிங்ஸில் இலங்கை 367 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அஸ்வின் 4, மிஷஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

176 என்ற இலகுவான இலக்கை இந்திய அணி இலகுவாகப் பெற்று விடும் என்றிருக்க இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் அபாரமாக பந்துவீசினார்.

அவரின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத இந்திய அணி மளமளவென்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 112 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதில் ரஹானே 36 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றார். இலங்கையின் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 7, கௌசல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக சந்திமால் தெரிவானார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*