லிங்கா படத்தின் தோல்வியை கூறி ”பாயும் புலி” திரைப்படத்திற்கு தடை

விஷால் நடிப்பில் பாயும் புலி படம் அடுத்த மாதம் திரைக்கு new-Gif1வருவதாக இருந்தது. ஆனால், ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் லிங்கா படத்தின் தோல்வியை கூறி, இப்படத்தை தடை செய்கிறோம் என்று அறிக்கைவிட்டனர்.(லிங்கா படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தான் பாயும் புலி படத்தையும் வெளியிடுகிறது).

தற்போது இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறுகையில், ”லிங்கா”வில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ”பாயும் புலி” திரைப்படத்திற்கு தடை விதிப்பது எந்த விதத்திலும் தொழில் தர்மம் அல்ல, எனவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ”பாயும் புலி” திரைப்படத்தின் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

அப்படி தடையை நீக்காத பட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனை தொடர்பாக தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’என தெரிவித்துள்ளனர்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*