திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்தவித விருப்பமும் இல்லை:லட்சுமிமேனன்

‘கும்கி’ பட வெற்றியின் மூலம் தமிழ்பட உலகில் முக்கிய new-Gif1இடம் பிடித்தவர் லட்சுமிமேனன். பள்ளியில் படிக்கும்போதே இவர் திரைப்படத்தில் நடித்ததை சிலர் சர்ச்சை ஆக்கினார்கள் என்றாலும், ‘சுந்தரபாண்டியன்’ உள்பட பல படங்களில் முக்கிய நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

பிளஸ் – 2 தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமிமேனன் தற்போது, கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். பி.ஏ. இங்கிலீஸ் லிட்ரேச்சர் படிக்கிறார். 3 ஆண்டுகள் நன்றாக படித்து சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதற்காக படிப்பில் முழுகவனம் செலுத்துவது என்று முடிவு எடுத்திருக்கிறார். இதற்கிடையில், அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார்.

காதல், திருமணம் பற்றி லட்சுமிமேனனிடம் கேட்டபோது.. ‘எத்தனையோ பேர் என்னை காதலித்து இருக்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. காதலிப்பதாக கூறி என்னுடன் யாராவது பழகினால் 2 மாதம் அவர்களுடன் பேசுவேன். பின்னர் தவிர்த்து விடுவேன்.

காதலில் மூழ்கி கிடப்பது வாழ்க்கையை சோர்வடைய செய்துவிடும். நடிகர்களில் சித்தார்த், ஜெயம்ரவி ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்தவித விருப்பமும் இல்லை. கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார். Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*