எதிர்பார்க்காத வகையில் இந்திய சந்தை வீ ழ்சி இத்தகைய நிலைக்கு என்ன காரணம்?

யாரும் எதிர்பார்க்காத வகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1624.51 புள்ளிகள் வரை சரிந்து இந்திய சந்தையைப் பதம் பார்த்து வருகிறது இத்தகைய நிலைக்கு என்ன காரணம்?
உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தி மற்றும் வர்த்தகத் தளமாக விளங்கும் சீனாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக வீழ்ச்சி இந்தியாவைnew-Gif1 மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பாதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சீனா உற்பத்தி அளவீடுகள் இந்நாட்டுச் சந்தையை 9 சதவீதம் வரை சரிவிற்குக் கொண்டு சென்றது. மேலும் சீன அரசு தனது வர்த்தகத்தை மேம்படுத்தும் பொருட்டு ஓய்வுதிய நிதியை முதலீட்டு ஆபத்து நிறைந்த பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதன்பின் 547 பில்லியன் டாலர் மதிப்பிலான ஓய்வுதிய நிதியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது. இதனால் சர்வதேச சந்தையில், சீன தனது முதலீட்டு நம்பிக்கையை இழந்தது.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் சர்வதேச சந்தையில், சீன சந்தையின் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது. இதனால் கணிப்புகளைக் கட்டியும் சீனா, தனது மதிப்பை வேகமாக இழந்து வருகிறது.
சீன சந்தையில் தாக்கத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 2011ஆம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய சரிவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் முதலீட்டு அளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீன சந்தையின் மந்தமான வளர்ச்சி மற்றும் உலகச் சந்தையில் நிலவும் அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு அளவு ஆகியவை சர்வதேச சந்தையில் இதன் விலை 6.5 வருடச் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாத துவக்கம் முதல் இந்திய பங்குச் சந்தையில் இருந்து சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு வெளியேறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சீன பொருளாதார நிலைப்பாடு தான். இதன் காரணமாக ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட்டால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியில் பல மாற்றங்கள் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டும் இந்திய சந்தையில் முதலீட்டு அதிகரிப்புக் குறித்துப் பன்னாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டிவருகிறது.
சீனா, அமெரிக்கா, இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் காரணமாக ஜப்பான், ஹாங்காங் போன்றவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு ஐரோப்பிய சந்தையைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட இச்சரிவிற்கு மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் 2.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 1,500 புள்ளிகள் வரை சரிந்து 25,980 புள்ளிகளை எட்டியது குறிப்பிடதக்கது.
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*