ஜனாதிபதியால் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் இருந்து 25 அங்கத்தவர்கள் பணி நீக்கம .

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய குழுவிலிருந்து new-Gif125 அங்கத்தவர்களை பதவிநீக்கம் செய்துள்ளார்.

மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கலான பட்டியலை ஜனாதிபதி நேற்றையதினம்  தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரைப் பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி சிறிசேன அவர்களின் இடத்திற்கு துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் விஸ்வா வர்ணபால ஆகியோரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பையடுத்து தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை கட்சியின் பொதுச்செயலாளர்களே தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கை தமக்கு நெருக்கமானவர்களை தேசியப்பட்டியல் மூலம் நியமிக்க வழிகோலிலுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*