‘யட்சன்’ படம் செப்டம்பர் மாதம் 11ம் திகதி வெளியாகும்

ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாGif 01 படிச்சவங்க’. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கியிருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தையடுத்து ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘யட்சன்’ படம் ஆகஸ்ட் 28-ம் திகதி வெளியாக இருந்தது. இதே தேதியில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘தனி ஒருவன்’ படமும் வெளியாகவுள்ளது. ஆர்யா, ஜெயம் ரவி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்போது ‘யட்சன்’ படம் செப்டம்பர் மாதம் 11ம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். செப்டம்பர் முதல் வாரத்தில் விஷாலின் ‘பாயும் புலி’ படமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய்யின் ‘புலி’ படமும் வெளியாகவுள்ளது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*