இத்தாலியில் இருந்து இலங்கை நபரோடு கள்ள தொடர்பு: இலங்கை வந்து பசி தீர்த்த பத்தினி

இத்தாலியில் கணவனோடு வசித்து வந்த நிலையில் , இலங்கையில் வசித்த நபர் ஒருவரோடு கள்ளத் தொடர்பை Gif 01ஏற்படுத்தியுள்ளார் ஒரு மனைவி.

பின்னர் அவர் தூண்டுதலின் பெயரில் கணவனும் மனைவியுமாக இலங்கை வந்து , பிலிமத்தலாவையில் வாழ்ந்து வந்துள்ளார்கள். குறித்த பகுதியில் உள்ள 30 வயது இளைஞரோடு இப் பெண் தனது உறவை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

இன் நிலையில் கணவன் இதனை திடீரென கண்டு பிடித்ததால் , குறித்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் (கணவனும் மனைவியும்) இத்தாலி சென்றுவிட்டார்கள்.

இதனை அடுத்து கடந்த வாரம் குறித்த இளைஞரை இனம் தெரியாத நபர்கள் தாக்கி , கழுத்தை வெட்டி , கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள , ரம்பொட மலையில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்கள்.

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. குறித்த இளைஞர் இறக்கவில்லை. கழுத்தை வெட்டியும் மலையில் இருந்து தள்ளி விட்டும் அவர் இறக்காத நிலையில் , பிரதேச வாசிகளால் கண்டு எடுக்கபப்ட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டார்.

இதனை அடுத்து அவர் கொடுத்த சாட்சியங்களின் அடிப்படையில் இருவர் தற்போது கைதாகியுள்ளார்கள். அவர்களை 12ம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்திருக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இத்தாலி செல்ல முன்னர் கணவனே இவர்களை செட் பண்ணி , குறித்த இளைஞனை போட்டுத்தள்ள பணம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கள்ளத் தொடர்புகள் செய்யும் வேலைகளைப் பார்த்தீர்களா? கள்ளத் தொடர்பு ஒரு பக்கம் இருக்க. காசைக் கொடுத்தால் எவர் கழுத்தையும் இலங்கையில் அறுக்கலாம் என்ற நிலை இன்னும் நீடிக்கிறது.Gif 02

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*