பேட்டரியில் இயங்கும் பத்து இன்ஜின்களை கொண்ட புதிய விமானம் சோதனை: நாசாவின் விண்வெளி இன்ஜினியர்

பேட்டரியில் இயங்கும் பத்து இன்ஜின்களை கொண்ட புதிய விமான சோதனை ஓட்டத்தை நாசா வெற்றிகரமாக நடத்தி Gif 01முடித்துள்ளது. மின் சக்தியில் இயங்கும் விமானங்கள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஈடுபட்டுள்ளது. அதன்படி கிரீஸ்ட் லைட்னிங் அல்லது ஜிஎல் 10 எனப்படும் பேட்டரியில் இயங்கும் விமானத்தை நாசா வடிவமைத்துள்ளது. தரையிறங்கும் போதும், ஏறும் போதும் ஹெலிகாப்டரை போலும், வானில் பறக்கும் போது மட்டும் விமானத்தை போல் பறக்ககூடிய வகையில் அந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3.05 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளில் எட்டு இன்ஜின்கள், வால் பகுதியில் இரண்டு இன்ஜின்கள் என மொத்தம் பத்து இன்ஜின்கள், விமானம் பறக்கும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும், அந்த மின்சாரம் பேட்டரியில் சேகரிக்கப்பட்டு விமானத்தை இயக்க பயன்படுத்தப்படும். பேட்டரியில் இயங்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. மின் சக்தியில் இயங்கும் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஜிஎல் 10 சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

முதலில் 2.3 கிலோ எடையில் சிறிய ரக விமானம் தயாரிக்கப்பட்டது. அடுத்தடுத்து விமானத்தின் எடை கூட்டப்பட்டு கடைசியாக 24.9 கிலோ எடை கொண்ட மாதிரி விமானம் பரிசோதிக்கப்பட்டது. இப்போது உருவாக்கியிருக்கும் ஜிஎல் 10 விமானம் 28.1 எடை கொண்டது. இந்த விமானத்தை மாதிரியாக கொண்டு எதிர்காலத்தில் நான்கு பேர் பயணிக்ககூடிய அளவுக்கு மிகப்பெரிய விமானத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன என்று நாசாவின் விண்வெளி இன்ஜினியர் கூறினார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*