பிரேசிலின் பஸ் நிலைய டிவிக்களில் திடீர் என ஓடிய ஆபாசபடம்???

பிரேசிலின் குரிடிபா நகரில் போகிரோ பஸ் நிலையம் உள்ளது.இந்த பஸ் நிலையத்தில் பஸ் வருகை மற்றும் செல்வது குறித்துGif 01 தகவலை தெரிவிக்க பெரிய அளவில் டிவி வைக்கபட்டு இருந்தது. நேற்று வெள்ளிக்கிழமை திடீர் என இந்த டிவி திரையில் ஆபாச படம் ஓடியது. இந்த படம் சுமார் 15 நிமிடம் ஓடி உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது ஆபாச படம் ஓடிய போது பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது என கூறினார்.

இது குறித்து நகர போக்குவரத்து துறை கூறும் போது சைபர் கிரைம் போலீசார் இது ஹேக்கர்களால் ஹேக்கிங் செய்யபட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இநத காட்சியை படம் பிடித்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர் கூறும் போது அதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் அது குறித்து கூற வார்த்தைகள இல்லை என கூறினார்.

பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பேரிய நகரங்களில் குர்டிபா நகரமும் ஒன்றாகும். இங்கு 20 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*