தொலைபேசி ஓங்கி ஒலித்தற்காக மன்னிப்பு கேட்ட நீதிபதி மா.இளஞ்செழியன்

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரில் Gif 01மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி முன்று நாட்கள் இடம்பெற்றதுடன் நேற்றும் இன்றும் காலை, மாலை என இரு அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை(09.8.2015) மாலை 4 மணிக்குக் கம்பன் விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த விழாவிலே தமிழ் நாட்டின் புகழ் பூத்த பேச்சாளர் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் உட்பட ஈழத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள், கல்விமான்கள், கலை இலக்கிய இரசிகர்கள் விருந்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விழாவின் தொடக்கவுரையை ஆற்றிய யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சபையோருக்கு தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்த போது அவரின் கையடக்கத் தொலைபேசி ஓங்கி ஒலித்தது.

அப்போது அவர் உடனே ஆங்கிலத்தில் ‘sorry’ என்று கூறிவிட்டுத் தனது கையடக்கத் தொலைபேசியின் அழைப்புக்குப் பதிலளிக்காது நிறுத்தினார்.

தனது தொலைபேசியை நீதிமன்றத்தில் எப்போதும் ஓய்வாகவிருக்கும் எனது தொலைபேசி இன்று இங்கே தவறுதலாக ஒலித்துவிட்டது. அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நீதிமன்றத்தில் தொலைபேசி ஒலித்தால் 1500 ரூபா அபராதம் செலுத்த வேண்டும். (சபையில் பலத்த சிரிப்பொலி) அதனால் நான் அந்த விடயத்தில் எப்போதும் மிகவும் அவதானமாகவிருப்பேன். இன்று இங்கு இடம்பெற்ற நாதஸ்வர ஓசையில் நான் மயங்கி விட்டேன்.

நீதிமன்றில் நாங்கள் பழகுவது கொலைகாரர், கொள்ளையடிப்பவன், போதைவஸ்துக்காரன், கற்பழித்தவன், கடத்தல்காரன், தெரு ரவுடிக்காரன், கோஷ்டி மோதல்காரன் ஆகியோர்.

அவர்கள் தான் எனது நாளாந்த நண்பர்கள் (சபையில் மீண்டும் பலத்த சிரிப்பொலி) இவர்களுடன் என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று கூறியதுடன் அவரது சுமார் 15 நிமிட உரை முடிவடையும் வரை சபையில் பலத்த கைதட்டல்களும், சிரிப்பொலிகளும் கேட்ட வண்ணமே இருந்தன.

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் விழாவின்’ நிறைவு நாளான இன்று விழா முடிவடைந்த இரவு 9 மணி வரை மண்டபம் நிறை சனக் கூட்டம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*