ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் ஒரு பெரிய சுமையூர்தி வெடிகுண்டு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் ஒரு பெரிய சுமையூர்தி வெடிகுண்டுGif 01 வெடித்ததில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்திருக்கின்றனர்.     நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.

அதில் பலர் உடைந்த கண்ணாடி சில்லுகளால் காயமடைந்திருக்கின்றனர். குண்டுவெடிப்பால் சேதமடைந்த கட்டிடங்களின் குவியல்களுக்குக் கீழ் மேலும் பலர் புதையுண்டு கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.பலியானவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனதெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் காபூலின் வீதியில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்திய இந்த வெடிகுண்டின் சத்தம் அந்நகரம் முழுவதிலும் உணரப்பட்டிருக்கிறது.

பூமியைச் சிதறியடித்த இது போன்ற தீவிரமான ஒரு வெடிச்சத்தத்தை இதுவரை தனது வாழ்வில் உணர்ந்ததே இல்லை என்று காபூலில் இருக்கும் ஒரு செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வெடிச்சத்தத்தை முதலில் உணர்ந்தவர்கள் இது ஒரு பூகம்பமாக இருக்கலாம் என்று நினைத்திருந்தனர்.ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பில் அங்கிருக்கும் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் கோபத்தை வெளியிட்டுவருகின்றனர்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*