குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிலாபம் மக்கள் எதிர்ப்பு:கலக்கத்தில் மகிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு Gif 01 சிலாபம் மக்கள் எதிர்ப்பு வெளிட்டுள்ளனர். நேற்று (06) சிலாபம் பகுதியில் இடம்பெறவிருக்கும் கூட்டங்களில் பங்கேற்கவென மஹிந்த ராஜபக்ஷ புத்தளம் மாவட்ட வேட்பாளர் மில்ரோய் பெனாண்டோ வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பில் கலந்து கொண்ட மக்கள் பெனர், போஸ்டர் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். ஜனவரி 8ம் திகதி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்ததால் அவர் இப்போது வீட்டில் ஒய்வெடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாவும் அவரை மீண்டும் தோற்கடிக்கத் தயார் என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

8 வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது செய்யாதவற்றை இப்போது தோல்வி உறுதி எனத் தெரிந்து பொய் வாக்குறுதியாக வழங்கி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் என அரசியல் ஆய்வாளர்கள் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் எதிர்ப்பினால் மஹிந்த அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அருந்திக்க பெனாண்டோ, தயாசிறித திசேரா ஆகியோர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் மஹிந்தவால் பங்குபற்ற முடியவில்லை. இதனால் வேட்பாளர்கள் கவலையில் உள்ளதாக தெரியவருகிறது. இது ஒரு நல்ல சமிஞ்சையாக இல்லை என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக மகிந்த இனி ஓய்வு எடுக்கலாம் என்ற பேச்சு தான் அடிபடுகிறது. இதற்கு பின்னணியில் மீண்டும் ஒரு வல்லரசு இறங்கியுள்ளது என்கிறார்கள். அது எந்த நாடு என்று ஆராய்வதை விட ,அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பேஸ் புக் ஊடாகவே பல பரப்புரைகள் , இளையோர் மத்தியில் தற்போது பரப்பப்பட்டு வருகிறதாம். இதனால் ஒருவேளை மகிந்த சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் தோற்கலாம் என்கிறார்கள் அவதானிகள்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*