மருந்தே உணவு; உணவே மருந்து – கண்டங்கத்தரி செடியின் மருத்துவ குணங்கள்.

மருந்தே உணவு; உணவே மருந்து என்று கூறினாலும், இன்று விவசாயத்துக்கு பயன்படுத்தும் வீரியமிகு செயற்ைக உரங்கள்Gif 01 உடலின் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகின்றன.

இதனால் எளிதில் நோய் தொற்றிக்கொள்கிறது. லேசான காய்ச்சல், தலை வலி, இருமல் என்று வந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடி மருந்து, மாத்திரை, ஊசி என்ற நிலைக்கு சென்று விடுகிறோம். ஆங்கில மருத்துவமும் மிகவும் காஸ்ட்லி என்ற நிலைக்கு வந்து விட்டது. சாதாரண காய்ச்சலுக்கு சென்றாலே மாத சம்பளத்தில் கணிசமாக காலியாகி விடுகிறது. வருமுன் காப்பதே அழகு என்பதை நோய் தடுப்பில் முன்னிறுத்த வேண்டும். இதற்கு அந்தக்கால பாட்டி வைத்தியம் மிகச்சரியானது.

செலவே இன்றி குப்பை மேட்டிலும், தரிசு நிலத்திலும் முளைத்துக் கிடக்கும் குப்பை மேணி, கண்டங்கத்திரி, கீழா நெல்லி, தும்பை செடி போன்வற்றில் புதைந்து கிடக்குது ஏராளமான மருத்துவகுணங்கள். குப்பை மேட்டிலும், தரிசு நிலங்களிலும் முளைத்து கிடக்கும் குப்பை மேணி, கண்டங்கத்திரி, கீழா நெல்லி, தும்பை செடி போன்ற மருத்துவ குண முள்ளை செடிகளை பறித்து அந்தக்காலத்து பாட்டிகள், பெரிசுகள் வைத்தியம் பார்த்தனர். தலைவலிக்கு சுண்ணாம்பை கொளப்பி நெத்தியில் தடவ தலைவலி தலை தெறிக்க ஓடும். ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி யூக்ளிப்டஸ் இலையை போட்டு சலசலவென கொதிக்க வைத்து கம்பளியால் உடல் முழுவதும் மூடிக் கொண்டு ஆவி பிடிக்க தலை வலி குணமாகும்.

இப்படி ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நாம் இருக்கும் இடங்களை சுற்றி வளர்ந்து கிடக்கும் செடிகளில் கண்டங்கத்தரி செடியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். இதில் கண்டங்கத்திரியின் அரிய மருத்துவ குணங்களை பார்ப்போம். இதன் ஆங்கில பெயர் வைல்டு எக் பிளான்ட். தாவரவியல் பெயர்: சொலனம் சுர்ரீடென்ஸ். தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண்ணில் மானாவாரியாக வளரக் கூடியது. செடி முழுவதும் முட்கள் இருக்கும்.

பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். காய் முற்றி மஞ்சள் நிறத்தில் பழம் பழுக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணமடையவை. மஞ்சள் நிறத்திலான பழுத்தை தீயில் வாட்டி வாயில் புகை பிடிக்க பல் வலி, பல் அரணை தீரும். உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்ததை சீர் செய்ய உதவுகிறது.

வரட்டு இருமலுக்கு அரிய மருந்து. வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் நம்மை விட்டு அகலும். காலில் ஏற்படும் வெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள் பட்ட இருமலுக்கு கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் பழத்தின் விதைகள் பயன்படும். பழத்தை தீயில் வாட்டும் போது புகை எழும். இந்த புகையை பல்லில் படும்படி செய்தால் வலி தீரும். கண்டங்கத்திரி வேர், ஆடு தொடா வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான காய்ச்சல் காணாமல் போகும். காயை சுண்டைக்காய் போன்று குழம்பிலிட்டு அளவாக அருந்தினால் பசியை தூண்டும்.

கண்டங்கத்தரி பழத்தை மண் பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் கூட்டி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்து வைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு மேல் தடவி வர குணமாகும். இதை காதில் இரண்டு சொட்டு விட்டு வர காது நோய் குணமாகும். குப்பை மேடு, தரிசு நிலம், சாலை யோரங்களில் அழகிய வண்ணத்தில் பூ பூத்து, சிறிய கத்தரிக்காய் போன்று காய்த்து இருக்கும் கண்டங் கத்தரி செடியை கண்டால் அதை நாம் உடனே பயன்படுத்தி கொள்வோம். இதனை சாதாரணமாக அவ்வப்போது எடுத்துக் கொண்டே வந்தால் சிறு, சிறு நோய்களுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்க்கலாம்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*