ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கச் சுடு பெண் ஒருவர் பலி..

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பெனடிக்Gif 01 மைதானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

 சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார்.

மேலும் மூவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவீன ரக காரொன்றில் வருகைதந்த சிலர் இன்று முற்பகல 11.45 அளவில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கறுப்பு நிற ஹைப்ரிட் ரக காரில் வந்தவர்களே தமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேறட்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டுகொண்டிருக்கும் நிலையில் இவ்வாறானதொாரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*