தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக ஆஃப்கன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக ஆஃப்கன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Gif 01ஆனால், தாலிபான்கள் இது குறித்து எதையும் கூறவில்லை.

அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் என ஆஃப்கன் அரசு வட்டாரங்களும் புலனாய்வுத் துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

இது குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது, இது குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கூறினார்.

முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக இதற்கு முன்பும் பல முறை தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஆனால், இப்போதுதான் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் இதனை உறுதிசெய்துள்ளன.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் விலகிக்கொண்ட பிறகு, அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், தாலிபானுக்கு எதிரான பிற இயக்கங்களைத் தோற்கடித்தவர் முல்லா ஒமர்.

முல்லா ஒமருக்கு அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடனுடன் இருந்த நெருக்கத்தின் காரணமாகவே, 9/11 சம்பவத்திற்குப் பிறகு ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் உள்ளே நுழைந்தன.

அப்போதிருந்தே முல்லா ஒமர் தலைமறைவாக இருந்துவருகிறார். அவரை பிடிப்பதற்கான தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி அளிக்கப்படுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக அவரது பெயரில் தொடர்ந்து அறிக்கைகளை தாலிபான் வெளியிட்டுவந்தது.

சமீபத்தில், ஆஃப்கன் அரசுக்கும் தாலிபான்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை தான் ஆதரிப்பதாக அவரது பெயரில் ஒரு அறிக்கை வெளிவந்தது.

ஆனால், இந்த அறிக்கை குரல் வடிவிலோ, வீடியோ காட்சியாகவோ இல்லாமல் தாலிபானின் இணைய தளத்தில் எழுத்துவடிவில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவர் இறந்திருக்கலாம் அல்லது செயல்பட முடியாத நிலையில் இருக்கலாம் என்ற யூகங்கள் பரவின.

முல்லா முஹம்மது ஒமர்

ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்திலிருக்கும் சஹி ஹிம்மத் என்ற கிராமத்தில் 1960ஆம் ஆண்டில் முல்லா ஒமர் பிறந்தார் என தாலிபான் கூறுகிறது.

1980களில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட்டபோது, அவரது வலது கண்ணில் சேதம் ஏற்பட்டது.

அல் – கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடனுடன் நெருங்கிய தொடர்பை அவர் பேணிவந்தார்.

1996லிருந்து தாலிபான் இயக்கத்தின் அதியுயர் தலைவராக இருந்துவந்தார்.

2001ல் ஒமர் தலைமையிலான அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்தின.

இந்த வருடத் துவக்கத்தில் தாலிபான்கள் இவரது வாழ்க்கைச் சரிதத்தை பதிப்பித்தனர். இவருக்கு சொந்தமாக வீடோ, வெளிநாட்டில் வங்கிக் கணக்கோ இல்லையென்றும் நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர் என்றும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*