ஈழவர் விளையாட்டு கழகம் 1-0 என்ற அடிப்படையில் ஒஸ்கார் நினைவு கோப்பையை கைப்பற்றி கொண்டது.

பிரான்ஸ் மண்ணில் லெப்டினல் கேணல் விக்டர் அண்ணா ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலானnew-Gif1 உதைபந்தாட்ட போட்டி இன்று இனிதாக நடைபெற்று முடிவடைந்தது.

இந்த போட்டிகளில் பிரித்தானியாவில் இருந்து மூன்று கழகங்களும் , நெதர்லாந்தில் இருந்து ஒரு கழகமும் ,சுவிஸ்லாந்தில் இருந்து ஒரு கழகமும் , பிரான்ஸ் மண்ணில் இருந்து ஏழு கழகங்களுமாக மொத்தம் 12 கழகங்கள் கலந்து கொண்டன . இறுதி ஆட்டத்திற்கு பிரித்தானியா மகாஜனா விளையாட்டு கழகமும் , பிரான்ஸ் ஈழவர் விளையாட்டு கழகமும் தெரிவாகின.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈழவர் விளையாட்டு கழகம் 1-0 என்ற அடிப்படையில் ஒஸ்கார் நினைவு கோப்பையை கைப்பற்றி கொண்டது. ஈழவர் விளையாட்டு கழகம் மூன்றாவது முறையாக இக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Oskar (4) Oskar (3) Oskar (2)

600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*