தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் நடார்த்திய 18வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டுஇயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 18வது தமிழர் new-Gif1விளையாட்டு விழா 12-07-2015 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக தமது இனிய உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

பிரதான பொதுச்சுடரினை மாவீரர் குட்டி அவர்களின் சகோதரர் திரு. ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென் செந்தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. மரி ஜோர்ஜ் பூவே, ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த அரச

பிரதநிதிகளான திரு. பாலச்சந்திரன், திரு. ஜெயச்சந்திரன், திரு. மைந்தன், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்ச் தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும், தமிழர்களின் பாரம்பரிய பறைவாத்திய இசை முழங்க மைதானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர் பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை சென் செந்தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை நாடுகடந்த அரசபை உறுப்பினர் திரு. ஜெயச்சந்திரன், ஐரோப்பிய பாராளுமன்ற கொடியினை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்ஸ் தலைவரும், ரான்சி நகரமன்ற உறுப்பினருமான திரு. அலன் ஆனந்தன், ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவைத்தழுவிய மாவீரர்களுக்கும் போரினாலும் இயற்கை அனர்த்தங்களாளும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த மங்கள விளக்கினை பிரான்ஸ்  நாட்டின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், கமினியுஸ்  சட்சியின் முன்னாள் தலைவியும் தற்போதய பாராளுமன்ற  உறுப்பினருமான திருமதி. மரிஜோர் புவே, நாடுகடந்த தமிழீழ அரசு  பிரதநிதிகளான திரு. பாலச்சந்திரன், திரு. மைந்தன், தமிழர்  புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு.சுந்தரவேல், தலைவர்  திரு. கோணேஸ்வரன், ஆகியோர் எற்றி வைத்தனர்.TRO-ORT-vilamparamபாரம்பரிய பறைவாத்திய இசை வழங்கிய கலைஞர்கள்  bமதிப்பளிக்கப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான விளையாட்டுக்கள்  ஆரம்பமாகியது.

தமிழர் விளையாட்டு விழா 2015 உதைபந்தாட்ட போட்டியில் 4  குழுக்களும், துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டியில் 4 குழுக்களும், கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 20அணிகளும்,  தாச்சிப்போட்டியில்,  8அணிகளும் கயிறுழுத்தல் போட்டியில் 10அணிகளும்,   கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர்.

அரங்க நிகழ்வாக paris oumabady இசைக் குழுவின் இன்னிசை கானங்கள்,  பார்வையாளர்கள் கலந்கொள்ளும் நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி  இடம்பெற்றது. பிரான்சின் பிரபல நாடகக் கலைஞர்களின் நடிப்பில், திரு. பரா அவர்களின் நெறியாள்கையில் நாடகமும் இடம்பெற்று மக்களது  ஏகோபித்த கரகோசத்தையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டது.

சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, ஈருருளி மெது ஓட்டம், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும்  இடம்பெற்றது.

இவ்வாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கராட்டி, பூப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான கேர்மெஸ், வீபி ரீவி கேம் விளையாட்டுக்களும்  இடம்பெற்றது.

கரம் சதுரங்கப் போட்டிகளில் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர்.  கரம் சதுரங்கப் போட்டிகளை தமிழர் சதுரங்க ஒன்றியம் பிரான்ஸ்  உறுப்பினர்கள் நடாத்தி உறுதுணை வழங்கினர்; சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைத்துல செயலக பொறுப்பாளர் திரு. நாயகன், மற்றும் போராளி. பார்த்தீபன், போராளி  உமா, நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக  செயற்பாட்டாளர்கள், துறை சார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள்,

வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் புளோ மெனில் நகரபிதா திரு. தியேரி  மெங்கோன் (ஆ. வுhநைசசல ஆநபைநெn), டுனி துணை நகரபிதா, கிராம  முன்னேற்றச்சங்க பிரதிநிதிகள், மற்றும் பல பிரமுகர்கள் வெற்றி  பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி  வெற்றியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

வர்த்தக நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலிகள்  தங்கள் விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களை கவர்ந்திழுத்தனர். இவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 668 என்ற இலக்கம்  குலுக்கல் மூலம் உந்துருளிக்கு தெரிவாகியது. மேலும் 13 இலக்கங்கள்  நினைவு சின்னத்திற்கு குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

இவற்றை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்குகின்றது. தாயக மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவிற்கு இவ்வாண்டும்,  இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம்  சமூக ஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட  விழாவில் சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 6 000ற்கும் மேற்பட்ட  மக்கள் கலந்து கொண்டனர். விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு  பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலக்கங்கள்

இலக்கங்கள்                          இலக்கங்கள்

01                                                             0668

02                                                             2190

03                                                             4031

04                                                             1436 …..ok

05                                                              3578

06                                                              1492

07                                                              2955

08                                                              1393

09                                                              4036

10                                                               0422

11                                                               3749

12                                                               1410

13                                                                1932

14                                                                 0660

600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*