டாப் 10 பட்டியலில் பேஸ்புக்!!! ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள், பட்டியலில் இணையாக இணைந்தது!

இன்றைய போட்டி மிகுந்த உலகில் ஒரு நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக நடத்துவது மிகக் கடினம், அதிலும் சந்தை new-Gif1மதிப்பில் டாப் 10 இடங்களுக்குள் நுழைவது உண்மையிலேயே பலரின் கனவாக மட்டுமே இருக்கும்.
ஆனால் இந்தக் கனவை நினைவாக்கியுள்ளது பேஸ்புக். 2004ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம், 52 வருட பழமையான வால்மார்ட் நிறுவனத்தைச் சந்தை மதிப்பில் முந்தியுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தையின் எஸ் அண்ட் பி 500 குறியீடு பட்டியலில் டாப் 10 பட்டியலில் பேஸ்புக் நிறுவனம் முதன் முறையாக நுழைந்துள்ளது.
வால்மார்ட்…..
கடந்த 1962ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தனது சில்லறை வர்த்தகக் கிளைகளை அமைத்துள்ளது. மேலும் பேஸ்புக் மற்றும் வால்மார்ட் நிறுவன மதிப்பை ஒப்பிடுகையில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டாப் 10 பட்டியலில் இருந்து வால்மார்ட் நீக்கப்பட்டது வருத்தமான விஷயம் தான்.
TRO-ORT-vilamparam
4 பில்லியன் டாலர் வித்தியாசம் இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றை வர்த்தகத்தில் சரிந்ததால், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 234 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இருநிறுவனங்களுக்கு மத்தியில் ஏறத்தாழ 4 பில்லியன் டாலர் வித்தியாசம் மட்டுமே.
பேஸ்புக்……..
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.14 டாலர் உயர்ந்து ஒரு பங்கு 87.88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 238 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்….
டாப் 10 பட்டியில் இடம்பெற்றுள்ள 9 நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவன மதிப்பிற்கு அருகில் கூட நெருங்கவில்லை. இந்நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் சுமார் 735 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*