பிரான்ஸ் கிழக்குப் பகுதியில் அமெரிக்க எரிவாயு தொழிற்சாலையில் பயங்கரவாத தாக்குதல்.

பிரான்ஸ், குவைத் மற்றும் துனிசியா ஆகிய 3 நாடுகளில் இன்று அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களால் அந்நாட்டுகளில் பதற்றம் new-Gif1நிலவுகிறது. துனிசியாவில் சவுசி என்ற நகரில் உள்ள சுற்றுலா ஓட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

tunisie 02இம்பீரியல் மார்ஹபா’ என்ற ஓட்டலில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த தீவிரவாதி ஒருவன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதியை சுட்டுக்கொன்றதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடந்த சவுசி நகரம், தலைநகர் துனிஷிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது.

thunisi 01

குவைத்தில் தாக்குதல்

இதனிடையே குவைத் நகரில் நெரிசலான பகுதியில் உள்ள ஷியா பிரிவினரின் சாதிக் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 25 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வழக்கமான வழிபாடுகள் முடிந்த நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 13 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சன்னி முஸ்லிம்களுக்கு ஷியா இஸ்லாமியத்தை பிரச்சாரம் செய்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதியில் உள்ள ஐ.எஸ். தொடர்புடைய நஜ்த் பிராவின்ஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. TRO-ORT-vilamparam

பிரான்ஸிலும் தாக்குதல்

இந்நிலையில் பிரான்ஸ் லியோன் கிழக்குப் பகுதியில் (Saint-Quentin-Fallavier) அமெரிக்க எரிவாயு தொழிற்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய தலை துண்டிக்கப்பட்ட  உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும்,  பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

அந்த கட்டிடத்தை வெடித்து தரைமட்டமாக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஒல்லாந்து தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு காவல்துறைfr02 தெரிவித்திருக்கிறது.

லியான் நகரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலையின் பாதுகாப்புத்தடைச்சுவரில் பலர் பயணித்த ஒரு கார் வந்து மோதியதாகவும் அதைத்தொடர்ந்து அங்கே வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முப்பது வயதுடைய ஒரு நபரை அந்த தொழிற்சாலையில் வைத்து தாங்கள் கைது செய்திருப்பதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர் பிரான்ஸின் புலனாய்வுத்துறையினருக்கு தெரிந்த நபர் என்றும் பிரான்ஸின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வளாகத்தில் இஸ்லாமிய கொடிகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு பிரெஞ்சின் உள்துறை அமைச்சர் பெர்னார் கசனவ் சென்றிருக்கிறார்.

பிரெஞ்சு நகைச்சுவை சஞ்சிகையான சார்ளி ஹெப்தோ மீதும் பாரிஸில் வேறு இடங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஐந்து மாதங்கள் கழித்து இன்றைய இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

fr 01

600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*