கவிதை – நான் அகதியாகி விட்டேனோ? (தமிழ்நேயன்)

TRO-ORT-vilamparamமுட்டை பொரியலும் சோறும் முழுநேர கனவானது
சட்டை பைக்குள் காசு தடவி பார்ப்பதொன்றாகியது
மாறாத வடுக்களும் மனம் விரும்பாச்சொற்களும்
வாழ்நாள் கேட்கும் மொழியாகியது
     நான் அகதியாகி விட்டேனோ?

அறியாத வயதில் ஆர்ப்பாட்டமாய் சுதந்திரத்தோடு
அறிந்த வயதில் அறியாத தேசத்தில், அநாதையாகி
அயர்ந்து தூங்க நேரமில்லாமல்
எனக்கு நானே நஞ்சுப்பாம்பாய்
    நான் அகதியாகி விட்டேனோ?

அறியாத மொழிகள், அவலப்பார்வைகள்;
மாதந்தோறும் பிச்சைக்காசுகள்
அதற்கு நான் சொல்லும் அற்ப காரணங்கள்
நான் யாரென்று சொல்ல கையில் அத்தாட்சிப்பத்திரம்
சந்தேகம் நான் மனிதன் என்றோ?
   நான் அகதியாகி விட்டேனோ?

கோபம் வரவில்லை, சந்தோசம் காணவில்லை
பதறி துடித்து பலமணிநேர வேலை
அணைந்த கரிக்கட்டையாய் சில துளி சம்பளங்கள்
கல்லெறி வாங்கும் தெருவோர நாய்களாய்
எதிர்த்து குரைக்க உரிமையில்லை, நிற்க நிலமுமில்லை
அகதி என் இயல்பாகி விட்டதோ?

வரமா சாபமா வாழ்க்கை?
தீர்மானிப்பது நாங்களா? விதியா?

தமிழ்நேயன்

Tamilneyan004@gmail.com

600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*