நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் new-Gifஆரம்பமாகவுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிச்சிக்கத் திரண்டிருந்தனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 27 ஆம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம் வீதியுலாவும் இடம்பெறும்.

29 ஆம் திகதி இரவு சப்பறத் திருவிழாவும், 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த்திரு விழாவும் மறுநாள் தீர்த்தத் திரு விழாவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை யாத்திரியர்களின் நலன்கருதி வழமை போன்று இம்முறையும் அமுத சுரபி அன்னதான சபை மற்றும் தாகசாந்தி நிலைய சேவை என்பனவும், போக்குவரத்துச் சேவை, மோட்டார் படகுச்சேவை, சுகாதார சேவை, சாரணர் சேவை, சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, செஞ்சிலுவைச் சங்கத்தினரின் சேவை, மக்கள் நலன் புரிச் சங்கத்தினரின் சேவை என்பனவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*