இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன??? மற்றுமோர் ஆதாரம்.(வீடியோ)

தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்ட இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்று கூறுகின்றார் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் சரணடைந்த நடேசன், புலித்தேவன், உட்பட பல போராளிகளையும், மக்களையும் தேனீர் கெடுத்த பின் சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம். ஆதாரம்

உலகம் என்பதற்து  உதாரனமாக இது இருக்கும்!!!    மீள் நினைவாக ஒரு பதிவு….

நேட்டோவும் ஆப்கானிஸ்தானும்; சிறீலங்காவும் தமிழீழமும்.

அதிநவீன விமானப்படை விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்று அப்பாவி ஆப்கான் மக்களை தினமும் கொன்று குவிக்கின்றன. அப்படி கொன்று குவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல நூறாகும்.

ஆனால் நேட்டோவின் ஆதிக்கத்துள் இருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஐநாவும் இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஏனெனில் மனித உரிமைகளை மீறிறவர்கள் அமெரிக்க தலைமையிலான ஜனநாயக முதலாளிமார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய அகோர விமானத் தாக்குதலில் வீதிப்புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை அம்மாகாணத்துக்கான கவர்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால் நோட்டோவோ தாக்குதல் நடந்தி உள்ளூரில் இருந்து அப்பாவிகளின் கொலை தொடர்பில் கண்டனங்கள் வெளியான பின்னரும் தனது தாக்குதலில் தலிபான் தலைவர்களே கொல்லப்பட்டதாக சிறீலங்கா போல அறிக்கை விடுகிறது.

இது அப்பட்டமான போர் குற்றம் என்பதற்கும் மேலால் நேட்டோ தனது மனித உரிமை மீறல்களை தலிபான் தீவிரவாதத்தை அழிக்கின்றன் என்ற போர்வையில் அரங்கேற்றி வருவது உலகில் அடக்குமுறை அரசுகளுக்கு நேட்டோ முன்னுதாரணமாக விளங்க வகை செய்கிறது. இது தொடர்பில் ஐநா உட்பட மற்றும் நாடுகளும் பாரா முகமாகவே நடந்து கொள்கின்றன.

ஆப்கானிஸ்தான் மக்கள் சோவியத் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் உதவியால் வளர்க்கப்பட்ட தலிபானின் உதவி கொண்டு சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டனர். இன்று அமெரிக்கா தானே உருவாக்கிய தலிபானையும் ஒசாமாவையும் அழிக்கிறன் என்று தனது பிராந்திய நலன்களுக்காக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நின்று கொண்டு அப்பட்டமான மனிதப் படுகொலைகளை தனது வல்லாதிக்க விரிவாக்கத்துக்காகச் செய்கின்ற போது உலகம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சிறீலங்காவிலும் இதேபோன்ற ஒரு நிலையை அமெரிக்கா சிங்கள பயங்கரவாத அரசுக்கு உதவி செய்வதன் மூலம் உருவாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலைகளுக்கு எதிராக உலக நாடுகளின் தலைவர்களை நம்பி காரியமாகப் போவதில்லை. உலகெங்கும் மக்கள் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் அப்பட்டமான மனிதப் படுகொலைகளை திரண்டு கண்டிப்பதுடன் அமெரிக்காவின் வல்லாதிக்க விரிவாக்கதுக்கு முடிவு கட்ட போராடத் தயாராகவும் வேண்டும்.

செய்திக்கான பிரதான இணைப்பு இங்கு http://news.bbc.co.uk/2/hi/south_asia/7118939.stm

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*