மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வலைதளப் பதிவருக்கு சவுக்கடி தண்டனை வேண்டாம்:ஐரோப்பிய ஒன்றியம்

மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வலைதளப் பதிவருக்கு சவுக்கடி தண்டனைnew-Gif கொடுக்க வேண்டாம் என சவுதியிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இன்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் கடந்த 2012–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து முதல் கட்டமாக 50 சவுக்கடி தண்டனை ஜெட்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த வீடியோ செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.

இதனால் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து சவுதி அரேபியா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.  ஆனால் உச்சநீதி மன்றம் ரைப் படாவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடியையும் உறுதி செய்வதாக தெரிவித்துவிட்டது. எனவே விரைவில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் ”சவுக்கடி தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத மனித தன்மை அற்ற செயல். எனவே ரைப் படாவிக்கு கொடுக்கப்படவிருக்கும் சவுக்கடி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சவுதி அரேபியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் கருத்து சுதந்திரத்தை மதிக்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*