வடக்கில் இளம்தலைமுறையினரை அழிக்கும் மாவா போதைப் பார்க்கு

அச்சுவேலி நகர்ப்பகுதியில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்த கடைnew-Gif உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி,  தீர்ப்பளித்தார்.

தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறின் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் தெரிவித்தார்.
அச்சுவேலி நகரப் பகுதியில் போதைப்பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளரை கடந்த ஜனவரி மாதம் காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று,  தீர்ப்பு வாசிக்கப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
யாழில் தற்போது போதைப்பொருட்கள் மிக இலகுவாக கிடைக்கிறது. அதிலும் “மாவா என்னும் பொதைப் பொருள் அரிசி பருப்பு கடைகளில் இருப்பதுபோல சாதாரண கடைகளில் கூட விற்க்கப்படுகிறது. பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளில் தான் அதிகமாக மாவா விற்கப்பட்டு வருகிறது. மேலும் இது மாணவர்களை குறிவைத்தே விற்க்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்லாகத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியில், பயிலும் 2 உயர்தர மாணவர்கள் மாவா வை அடித்துள்ளார்கள்.TRO--ORT-vilamparamஇதனால் அவர்கள் சற்று நேரத்தில் எல்லாம் வகுப்பறையில் , குப்பிறப் பிரண்டு விழுந்து எழுந்துள்ளார்கள். இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்த ஆசிரியரைப் பார்த்து அம்மாணவர்கள் கெக்கட்டம் இட்டு சிரித்தும் உள்ளார்கள். போதையில் இவர்களுக்கு எல்லாம் விளையாட்டாக தெரிந்துள்ளது. குறித்த ஆசியர் இவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். யாழில் உள்ள பெற்றோர்கள் இதுதொடர்பாக கடும் விசனம் தெரிவித்து வருகிறார்கள். தமது ஆண் பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்பி அங்கே படிக்க வைப்பது நல்லது என்று அவர்கள் பேசிவருகிறார்கள் என்றும் அறியப்படுகிறது.

போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சமூகமே சீரழிந்து போகிறதே ?

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*