பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கனிஸ்கா தர்மதாஸ் தமிழ்நாடு.

தேனிலும் இனியவள்  தேகிடாத சுவையவள் . new-Gif
முள்ளில்லா மலரவள்  முகம் காட்டும் நிலவவள் .

மெல்ல சிரிக்கையில்  சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்  மிரண்டிடும் கடல் அலைகள் .

கள்ளம் இல்லா வெள்ளை மனம்  கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்  கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்

கோபம் போல நான் நடித்தால்  குழந்தையவள் தான் துடிப்பாள்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து  கன்னமதில் இதழ் பதிப்பாள்.

என் தேவதைக்கு இன்றோடு  வயது தான் மூண்று
எம் வீட்டினில் இவளே தான்  மணம்வீசும் மலர் தேரு.

வாழ்த்துகின்றேன் மனதால் முத்தே வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!!!!

யாழ்.எவ்.எம்.றேடியோவும் தனது பிறந்தநாளை கொண்டாடும் கனிஸ்காவை வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றது.

kaniska home

kanishaka copy600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*