லண்டனில் மங்கள சமரவீரவும் ,த.தே.கூ.சுமந்திரன் , லண்டன் உலகத்தமிழர் பேரவையும் முக்கிய சந்திப்பு -கடிநொடி

கடந்த வாரம் லண்டனில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்new-Gif மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் மற்றும் உலகத்தமிழர் பேரவையும் முக்கிய சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார்களாம்.அதில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விடையம் இலங்கையில் நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகளாம்.இது உண்மையில் தமிழர்களிற்கு நன்மையை ஏற்படுத்துமா அல்லது வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு போடும் திட்டமா ?

புதிய அரசாங்கம் உருவாகுவதற்கு முன் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் இரகசிய சந்திப்பில் இவர்களினால் போடப்பட்ட தீர்மானங்களை இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

1) வடகிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவது.

2) சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வது.

3) புலத்தில் இருந்து இயங்கும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மேல் போடப்பட்ட தடைகளை முற்று முழுவதுவாக அகற்றுவது.

4) போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முழுமையான புனர்வாழ்வு கொடுப்பது.

5) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு முழுமையான அதிகாரத்தை கொடுப்பது.
இப்படியான பல விடையங்களை பேசிய பிறகு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனதிபதிக்கு தமிழ் மக்கள் எல்லோரும் வாக்குப் போடுங்களென்று சம்பந்தன் ஜயாவால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 5 மாதங்களாக இந்த புதிய அரசாங்கம் சிங்கப்பூரில் போட்ட திட்டத்தில் எதை முழுமையாக செய்தார்களென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும் மக்களிற்கு பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ?

1) வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் பல தடைவகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார் வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென்று, ஆனால் இன்று வரை புதிய அரசாங்கம் அதை காதிலை கூட கேட்பதில்லை.

TRO--ORT-vilamparam2) சில மாதங்களிற்கு முன் சுமந்திரன் அவர்கள் சொல்லியிருந்தார் 278 அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வார்களென்றும் அதை தான் புதிய அரசாங்கத்தின் நீதி அமைச்சகத்தோடு விவாதித்தேனென்றும். ஆனால், கடிநொடிக்கு கிடைத்த தகவலின் படி சுமந்திரன் அவர்கள் இலங்கையின் நீதி அமைச்சகத்தோடு அரசியல் கைதிகள் பற்றிய விவாதங்கள் எதையும் நடத்தவில்லையாம்.

இதில் யார் பொய் சொல்கின்றார்களென்று சுமந்திரன் அவர்கள் மக்களிற்கு தெளிவு படுத்தினால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

கடந்த காலத்தில் எம் விடுதலைப் போராட்ட அமைப்பின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கிய பிறகு தான் பல அரசியல் பேச்சு வார்த்தைக்கு அனுமதி கொடுத்தார் எம் தேசியத் தலைவர்.

ஆனால், தற்சமயம் புலத்தில் பல தமிழ் அமைப்புக்களையும் மற்றும் தனிப்பட்டவர்களையும் இலங்கை அரசாங்கம் தீவிரவாத சட்டதின் கீழ் தடை செய்தும், மறுமுனையில் தடை செய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவையை சுமந்திரன் அவர்கள் மூலம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர செய்யும் இரகசிய சந்திப்புக்கள் ஒட்டு மொத்த தமிழர்களையும் முட்டாள்கள் ஆக்க நினைக்கின்றார்களா சிங்களமும் மற்றும் சில தமிழ் அரசியல் வாதிகளும் ?

புலத்தில் ஈழம் சார்ந்த பல அமைப்புக்கள் இருக்கும் போது, உலகத் தமிழர் பேரவையோடு மட்டும் மறைமுகமாக பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் நடத்தினால் எவ்வாறு இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக தமிழர் தேசியவை, தமிழர் ஒருங்கினைப்புக் குழு, தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் இயங்கும் சில அரசியல் அமைப்புக்களை உள்வாங்கி ஒரு குடையின் கீழ் ஒரு மனதோடு எடுக்கும் முடிவுகளால் மட்டும் தான் இலங்கையில் நம்பிக்கை கட்டமைப்பை உருவாக்க முடியுமென்பது கடிநொடியின் கருத்தாகும்.

கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.

நன்றி,
கடிநொடி
தமிழ் இனம் வாழ்க. தமிழன் வாழ்க

இணைப்பு:-https://www.facebook.com/photo.php?fbid=1456429541321296&set=a.1445930509037866.1073741828.100008627926345&type=1&__mref=message_bubble

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*