நடிகை ஆர்த்தி அகர்வால் மரணமடைந்தார்

மூச்சுத்திணறல் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஒரு new-Gifஆஸ்பத்திரியில் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணமடைந்தார். அவருக்கு வயது 31. 

‘பம்பரக்கண்ணாலே’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது 14-வது வயதில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி அவரை பார்த்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த ஒரு நட்சத்திர விழாவில் நடனம் ஆடும்படி அழைத்தார். 

அந்த விழாவில் அவரது நடனம் இந்தி பட உலகினரின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சுனில் ஷெட்டி அவரது தந்தையிடம் இந்தி படங்களில் நடிக்க ஆர்த்தி அகர்வாலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். 2000-ம் ஆண்டில் அவர் தனது 16-வது வயதில் ‘பாகல்பன்’ என்ற இந்தி படத்தில் முதலாவதாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 

2001-ம் ஆண்டில் ‘நூவு நாகு நச்சாவ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஆர்த்தி அகர்வால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘வசந்தம்’, ‘அந்தால ராமுடு’, ‘அடவி ராமுடு’, ‘இந்திரா’, உள்பட 25 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரது படங்கள் அனைத்தும் அங்கு தொடர்ந்து வெற்றிபெற்றன. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு, ரவிதேஜா, தருண், ராஜசேகர் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ‘ரணம்-2’ என்ற தெலுங்கு படத்தில் 2005-ம் ஆண்டு கடைசியாக நடித்தார். 2

2005-ம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கோமா நிலைக்கு சென்று சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். 

பின்னர் அவர், திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். 2007-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் உடல் எடை அதிகமாகி பருமனாகிவிட்டார். 3

இதனால் உடல் எடையை குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட உலகில் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் எடை குறைப்பு ஆபரேஷன் செய்து கொண்டார். 

கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

அங்கு சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் நடக்கிறது. ஆர்த்தி அகர்வாலின் மரணத்துக்கு தெலுங்கு பட உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*