காதல் கவிதைகள் – இதயம் வலிக்கிறதே..!!!

நிஜமென்று வாழ்ந்த நம் உறவு
இன்று வெறும் கனவாகிக்
கலைந்த போதும்
உன் நினைவுகளை என் மனதில்
நிறைத்தே வைத்திருக்கிறேன்

உன் நினைவுகளை என் மனதினில்
விதைத்து விட்டு மறந்து விடு என்றாய்
நான் எப்படி மறப்பேன் ?

என் திசை எங்கும் தெரிவதெல்லாம்
உந்தன் முகம்தான்
வந்துவிடு என்று சொல்லிவிட்டு
உன் மனக் கதவை பூட்டிக் கொண்டாய்

நாம் மகிழ்ந்து பேசிய நம் நிமிடங்களை
பறித்து சென்றாய்
எனக்குள் கனவுகள் அனைத்தையும்
வளர்த்து விட்டு எனை ஏன் மறந்தாய்?

உன் உயிரை என்னிடம் தந்துவிட்டு
ஏன் என் பிரிவை கேட்டாய்?
நான் என்ன சொல்வேன்… என்ன செய்வேன்?
என் இதயம் வலிக்கிறதே..!!!600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*