ஃபிஃபா அமைப்பின் தலைவராக ஐந்தாவது முறையாகத் தேர்தெடுக்கப்பட்ட செப் பிளாட்டர் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர்new-Gif அறிவித்துள்ளார்.தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென செப் பிளாட்டர் அறிவித்துள்ளார்.

ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.

அடுத்த தலைவரைத் தேர்தடுக்க அசாதாரணமான பொதுக்கூட்டம் அழைக்கப்பட்டு அதில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆறு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஜூரிக் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல ஃபிஃபா அதிகாரிகளை அதிரடியாக கைது செய்துள்ள நிலையிலும் செப் பிளாட்டர் ஃபிஃபா அமைப்பின் தலைவராக ஐந்தாவது முறையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

ஃபிஃபாவின் பல உயரதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு வாக்குகளை அளித்தனர் என்பது உட்பட பலக் குற்றச்சாட்டுக்கள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பால் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா மற்றும் கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை அளித்தது உட்பட பல சர்ச்சைகளில் ஃபிஃபா சிக்கியுள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*