ஈழத்தமிழையும், ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்தியது தான் மாசு படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காததற்கு காரணம்:சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் new-Gifபாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் சாந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல கருத்துக்களை பகிர்ந்தார்.

இதில் இவர் பேசுகையில் ‘மாசு படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காததற்கு எல்லாரும் ஒரு வித காரணங்கள் கூறுகின்றனர், ஆனால், ஒரு சென்ஸார் அதிகாரி கூறிய தகவல் தான் என்னை கவர்ந்தது.இப்படத்தில் ‘ஈழத் தமிழ் பேசுகிறவனா… உன்னை உதைக்க வேண்டும்’ என்று ஒரு வசனம் வருகிறது.

அதை கோடிட்டு, “ஈழத்தமிழையும், ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இப்படத்துக்கு வரிச்சலுகை கிடையாது” என அவர் கூறினார் ‘ இவை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக சினேகன் தெரிவித்துள்ளார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*