வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் திருவிழா இன்று.

முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம்new-Gif வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகை அம்மன்  ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற  பொங்கல் திருவிழா இன்றாகும்.
வருடா வருடம் கண்ணகி அம்மனுக்கு பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்  2015ம் ஆண்டிற்கான பொங்கல் திருவிழா இன்று நடைபெறுகின்றது  பக்தர்கள் புடைசூழ அம்மனுக்கு மஞ்சப் பவனியும் இடம் பெறும்.

வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் ஸ்தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.

கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.

கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

vatra 2015 (11) vatra 2015 (10) vatra 2015 (9) vatra 2015 (8) vatra 2015 (7) vatra 2015 (6) vatra 2015 (5) vatra 2015 (4) vatra 2015 (2) vatra 2015 (3) vatra 2015 (1)

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*