அஜீத்தின் அடுத்து படம் பாட்ஷா 2ம் பாகம்? படநிறுவனம் எச்சரிக்கை

ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடுத்து கோலிவுட்டில் பிடிக்கப்போவது யார் என்றnew-Gif விவாதம் சில வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக அஜீத், விஜய் இருவருக்கிடையே இந்த போட்டி பனிப்போராக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக விஜய் தனது படங்களில் எம்ஜிஆர் ஸ்டைலை பின்பற்றி வருகிறார். அஜீத்தோ பில்லா 1, பில்லா 2 என நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜீத் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது பாட்ஷா படத்தின் 2ம் பாகமாக இருக்கும் என்று கோலிவுட்டில் தகவல் பரவிய வண்ணம் உள்ளது. அஜீத் நடிக்கும் புதிய படத்தின் கதை தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை
இந்நிலையில் அஜீத் படம் தயாரிக்கும் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்துக்கு நிறைய கடிதங்கள் வருகிறதாம். அஜீத் படம் எப்போது வெளியாகும் என்று கேட்டுதான் நிறைய கடிதங்கள் வருகின்றன. அவற்றில் ஒரு கடிதம் எச்சரிக்கை கடிதமாக இருந்ததாம். அஜீத் நடிக்கும் புதிய படம் பாட்ஷாவின் 2ம்பாகமாக உருவாக உள்ளதாக இணைய தளங்களில் கிசுகிசு பரவிய வண்ணம் உள்ளது.
அனுமதி இல்லாமல் பாட்ஷா பாணியிலான கதையை எடுத்தால் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சத்யாமூவிஸ்தான் பாட்ஷா படத்தை தயாரித்தது. அந்த நிறுவனம் சார்பில்தான் இக்கடிதம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஜீத் பட தயாரிப்பாளர் தரப்பு, அஜீத் படம் பாட்ஷா 2ம் பாகம் இல்லை. முற்றிலும் புதிய கதை என்கிறது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*