யாழ். நீதிமன்ற கட்டடதொகுதி தாக்குதல் வன்முறைகள் தொடர்பில் குற்றம்செய்தவர்களையே கைது செய்தோம்:டிஜஜி லலித் ஏ. ஜயசிங்க

யாழ். நீதிமன்ற கட்டடதொகுதி தாக்குதல் மற்றும் நகரில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில்new-Gif குற்றம்செய்தவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும்  வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
அதன்போது கடந்த 20 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லர். இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும்  இந்திய பிரஜை ஒருவரும் அடங்குகின்றனர். எனவே அவர்களுக்கான நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 வித்தியாவின் படுகொலையினை அடுத்து கடந்த 20 ஆம்  திகதி  பல போராட்டங்கள்  இடம்பெற்றன.
ஜனநாயக மக்கள்  போராட்டம் என்ற அடிப்படையில் பொலிஸார் அதற்குத் தடைவிதிக்கவில்லை. அன்றையதினம் நிதிமன்ற வளாகத்தில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும் வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தியும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்ல நகரில் உள்ள பொலிஸ் காவலரணையும்  அடித்து நொருக்கியிருந்தனர். இந்த சம்பவங்களை அடுத்து சம்பந்தப்பட்ட 130 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பாடசாலை மாணவர்களாக இருந்தாலும் இந்திய பிரஜையாக இருந்தாலும் குற்றம்  செய்தவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றமற்றவர்களை நாம் கைது செய்யவில்லை.
பாடசாலை மாணவர்களை நாம் கைது செய்துள்ளோம் என்றால் , பாடசாலை சீருடையுடன்  எவரையும் நாங்கள் கைது செய்யவில்லை.  யாவரும் சிவில் உடையுடனேயே நின்று கலகம் விளைவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளோம். இதற்கான தீர்ப்பினை நீதிமன்றமே வழங்கும் . நீதிமன்ற விசாரணையின்படி  குற்றமற்றவர்கள்  விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*