பீபா (fifa ) தலைவராக சுவிட்சர்லாந்தின் ஜோசப் செப் பிளேட்டர் 5-ஆவது முறையாக தெரிவு

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின்new-Gif (fifa ) தலைவராக சுவிட்சர்லாந்தின் ஜோசப் செப் பிளேட்டர் 5-ஆவது முறையாக  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் அதன் இரண்டு துணைத் தலைவர்கள் உட்பட 7 பேர் கடந்த புதன்கிழமை சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் ஊழலுக்குப் பெயர்போன பிளேட்டர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதனால் பிளேட்டரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜோர்டான் இளவரசரும், fifa வின் துணைத் தலைவருமான அலி பின் அல் ஹூசைனுக்கு ஆதரவு பெருகியது.
இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் நடைபெற்றது. இதில் 209 நாடுகளைச் சேர்ந்த fifa அங்கத்தினர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றின் முடிவில் வெற்றிக்குத் தேவையான 140 வாக்குகளில் பிளேட்டர் 133 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜோர்டான் இளவரசர் அல் ஹூசைன் 73 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நேரத்தில் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாகவும், தனக்கு தைரியமாக ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அல் ஹூசைன் அறிவித்தார்.
இதனால் 79 வயதான பிளேட்டர் மீண்டும் தலைவராக தேர்வானார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*