இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் சமாதானத்துக்காக தென்னாபிரிக்கா தொடர் முயற்சி

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பன new-Gifதொடர்பில் தென்னாபிரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முனைப்பு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

23வது பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின் பேரில் தென்னாபிரிக்கா, இலங்கையில் சமாதான முனைப்புக்களில் ஈடுபட்டது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பேரில் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வந்து தமது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

இந்தநிலையில் தென்னாபிரிக்காவின் வெளியுறவு பிரதியமைச்சர் நொமெய்ன்டியா பெகேட்டோ அண்மையில் லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்று தென்னாபிரிக்காவின் வெளியுறவு அமைச்சு குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக சிறில் ரமபோசாவை நியமிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி 2014ஆம் ஆண்டு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*