பிரித்தானியாவின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்க கூடாது

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்தும் நீடிப்பதா வேண்டாமா என்பது new-Gifகுறித்து பிரிட்டனில் நடக்கவிருக்கும் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்பது குறித்து பிரிட்டிஷ் அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது.

அதன்படி, பிரிட்டனில் வசிக்கும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் வாக்களிக்க இயலாது. அதேசமயம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களும் வாக்களிக்க முடியும்.

மேலும் ஐக்கிய ராஜ்ஜிய குடிமக்கள் நாட்டுக்கு வெளியே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக வசித்திருந்தால் அவர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு 2017 ஆம் ஆண்டுக்குள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உறுதியளித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஆணையர் ஜீன் க்ளாட் ஜங்கரிடம் இன்று மதியம் டேவிட் கேமரன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருக்கிறார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*