பிரான்சில் முள்ளிவாய்க்கல் நினைவு எழுச்சி நிகழ்வுகள் (photo&video)

பிரான்சில் முள்ளிவாய்க்கல் நினைவு எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்றது .new-Gif

மாலை 14.30 மணிக்கு பிரான்ஸ் லாச்சப்பலில் இருந்து ஆரம்பமாகி மாலை 17.00 மணிக்கு றீப்பப்ளீக் எனும் இடத்தில் விசேடமாக அமைக்கப்படதிடலில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல்லாயிரக்காணக்கான மக்கள் திரண்டு 2009 இல் முள்ளிவாய்க்கலில் இறந்த எமது தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைச் செயலாளர் தினேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரி ஒருவர் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரன் ஒருவர் மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் ஆரம்ப உரையை தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் மோகனதாஸ் அவர்கள் ஆற்றினார். அடுத்து, அங்கு ஈழநாதம் சஞ்சிகை வருகை தொடர்பான பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் சிறப்புப்;பிரதியை தமிழகத்தில் இருந்து வருகைதந்த  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  மற்றும் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரனும் சிறப்புப் பிரதியை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் ஜெயராஜ் அவர்கள் ஈழநாதம் பத்திரிகையின் 2009 முள்ளிவாய்க்கால் வரையில் அதன் சவாலான வருகை பற்றியும் வரவிருக்கும் ஈழநாதம் சஞ்சிகை பற்றியும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தனது உரையில், சிறிலங்கா அரசு எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள் வன்கொடுமைகள் தொடர்பாக ஆவேசமாக எடுத்துரைத்தார். நாம் ஒன்றுபட்டு எமக்கு  இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு, குர்திஸ்தான் பிரதிநிதிகள் மற்றும் மாநகரசபை உறுப்பினர் போன்றவர்களின்  பிரெஞ்சு மொழியிலான உரைகளும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வுபொங்கத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒரு பொதுக் கோரிக்கையாக இதுவரை காணாமற்போன 146 679 பேருக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்ற கோரிக்கையை முன்வைத்து பிரான்சு தமிழீழ மக்கள்பேரவையின் சார்பில் சர்வதேச அரசுகளுக்கும் சர்வதேச சமூகங்களுக்கும் மனு கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழக உறுப்பினர்கள்  வழங்கிய நாடகம் மற்றும் செவ்ரோன் மாணவ மாணவிகளின் நடிப்பில் ஆசிரியை ரேணுகாவின் நெறிப்படுத்தலில் ‘நெஞ்சை விட்டகலாத வடு” என்ற நாடகமும் அனைவரின் கண்களையும் பனிக்கவைத்தன.DSC_0262 DSC_0221 DSC_0235 DSC_0245 DSC_0249 DSCN7099 DSCN7035 DSCN7042 DSCN7049 DSCN7052DSCN7060 DSCN7061 DSCN7064 DSCN7068 DSCN7074 DSCN7076 DSCN7080 DSCN7084 DSCN7091 DSCN7093 DSCN7094 600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*