வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ காட்சிகள்:உஷாராக இருக்க போலீஸ் எச்சரிக்கை

செல்பி… ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அத்தனை பேரும் new-Gifஇன்று அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

செல்போனில் தங்களை அழகாக படம் பிடித்து அதனை திரும்ப… திரும்ப ரசித்துப் பார்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம். இப்படி தங்களை செல்பி எடுக்கும் பலர், அந்த போட்டோக்களை நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக செல்போனில் வாட்ஸ்-அப் வசதி வந்த பின்னர், செல்பி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகிறது.

வேறு ஒருவரிடம் செல்போனை கொடுத்து ஒரு போட்டோ எடுத்து தாருங்கள் என்று இன்று யாருமே கூறுவதில்லை. அதற்கு மாறாக யாருடன் நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டு செல்போனில் தங்களையே படம் எடுத்துக்கொள்ளும் பழக்கமே இன்று தொற்றிக் கொண்டுள்ளது.

செல்பி ஆசையால் பலர் தங்களை தனி அறையில் இருந்தபடியே உடல் அழகையும் படம் பிடித்து ரசிக்கிறார்கள். இது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களுக்கு ஆபத்தாகவே முடியும் என்பதை பெரும்பாலானவர்கள் உணர்வது இல்லை.

இளம் தம்பதிகள் சிலர் தாங்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளையும் செல்பியாக படம் பிடித்து பார்க்கிறார்கள். உடனே அதனை அழித்தும் விடுகிறார்கள். ஆனால் ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்’’ போட்டு தங்களது செல்போனில் பதிவாகி இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள்.may-18-final-benar

இன்று வாட்ஸ் அப்பில் ஏராளமான தகவல்கள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகின்றன. அழகு குறிப்பில் தொடங்கி ஆரோக்கியமான தகவல்கள் வரை அத்தனையுமே ‘வாட்ஸ் அப்’பில் அணி வகுக்கிறது. மறைந்த தலைவர்கள் பலரின் சாதனைகளும் புள்ளி விவரத்துடன் பரிமாறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆபாச வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. முகம் தெரியாத பெண்களில் தொடங்கி பிரபலமான நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வரை எல்லாம் வந்து விடுகிறது செல்போன் ‘வாட்ஸ் அப்’பில்.

இதில் பெரும்பாலானவை ‘செல்பி’ வீடியோக்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருக்கும் ஒருவரின் ஆபாச வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது செல்பி வீடியோவாகவே எடுக்கப்பட்டிருந்தது.

இதே போல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் அவ்வப்போது தவறாமல் இணைய தளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. பிரபல நடிகை ஒருவர் ஆண் நண்பருடன் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சி தற்போது வெளி வந்துள்ளது.

அதில் செல்பி கேமராவை பார்த்து அவர் கை காட்டுவதில் தொடங்கி அத்தனையும் பதிவாகி உள்ளது. இதே போல யார் என்றே தெரியாத குடும்ப பெண்கள் பலரும் தங்களை செல்பியாக எடுத்த வீடியோ காட்சிகளும் வெளியாகின்றன.may-18-final-benar

சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ் செய்தி இது.

செல்பி எடுக்கும் நண்பர்களே உஷாராக இருங்கள். நண்பர் ஒருவர், ‘‘தனது செல்போனை பழுது பார்க்க கொடுத்து திருப்பி வாங்கிய சில நாட்களில் அவரது போனுக்கே அவர் எடுத்திருந்த செல்பி வீடியோ காட்சிகள் வந்துள்ளது. அந்த வீடியோ ஆபாச வீடியோ என்பதால் நண்பர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, குடும்பத்துக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

உங்களது செல்போன் பழுதானால் நீங்கள் பழுது பார்ப்பதற்காக கடைக்காரரிடம் கொடுப்பீர்கள். அந்த செல்போனில் என்ன இருக்கிறது என்று பார்ப்போமே என நினைக்கும் ஒரு சில கடை ஊழியர்கள் நீங்கள் அழித்து விட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளையும் ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலமாக தனியாக பதிவு செய்து கொள்கிறார்கள்.

இப்படி திருட்டுத்தனமாக பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளில் ஆபாச வீடியோக்கள் இருந்தால் அதனை விற்று ஒரு சில கடைக்காரர்கள் காசும் பார்த்து விடுகிறார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயமாகும்.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இளம் பெண்களே… இனியாவது உஷாராக இருங்கள். உங்களை அழகாக படம் எடுங்கள். அதில் தப்பில்லை. நாம் தானே பார்க்கப் போகிறோம். பார்த்துவிட்டு அழித்து விடலாம் என நினைத்து எல்லை மீறிச் சென்று விடாதீர்கள். ‘‘எப்போதுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொள்ளுங்கள்’’ இது போன்ற செல்பி பாதிப்புகள் பற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது, ‘‘வந்த பின் பதறுவதை விட வரும் முன் காப்பதே நல்லது. எனவே இளம் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*