காவல்துறை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஒன்றை அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை:கோதபாய

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு எதிராக முன்னாள் new-Gifபாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஒன்றை அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என அவர் சட்டத்தரணிகள் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், காவல்துறை மா அதிபர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர், புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட ஆறு பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானது என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
 may-18-final-benar
காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 55ம் சரத்தின் அடிப்படையில் அமைச்சரவையின் அனுமதியுடன், காவல்துறை மா அதிபரின் முழு கண்காணிப்பில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இவ்வாறு காவல்துறைத் திணைக்களத்தில் 64 பிரிவுகள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*