பாரிஸின் கார் த்யூ நோர் ரெயில் நிலையத்தில் பீரங்கி குண்டு

பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸின் மிகவும் நெரிசல் மிகுந்த ரெயில்வேnew-Gif நிலையமான, கார் த்யூ நோர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் பீரங்கி குண்டுடன் பயணிக்க வந்ததால், அதிகாரிகள் ரெயில் நிலையத்திலிருந்த அனைவரையும் அப்புறப்படுத்த நேரிட்டது.

லண்டன் நகருக்கு பயணிக்கச் சென்ற இந்தப் பயணியின் முதுகில் வைத்திருந்த பையில் இந்த பீரங்கி ஷெல் குண்டு காணப்பட்டது.

இந்த ஷெல் முதல் அல்லது இரண்டாம் உலகப்போர் காலத்தையது என்று நம்பப்படுவதாக பிரெஞ்சு ரெயில் நிறுவனமான, எஸ்.என்.சி.எப் ( SNCF) நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். ரெயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளும் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.may-18-123

குண்டுகளை அப்புறப்படுத்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இப்போது ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*