ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாnew-Gif உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகாலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலையாகியுள்ளார்கள்.

இதே வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது போல, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி இன்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஇஅதிமுகவின் தொண்டர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று திங்களன்று வெளியாகியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.may-18-final-benar

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் தான் இதை தெரிவித்தார். அத்தோடு இந்த வழக்கில் தான் மேல்முறையீடு செய்யப்போவாதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி சி.ஆர். குமாரசாமி முன்பாக விசாரணைகள் 45 நாட்களுக்கு நடைபெற்று வந்தன. பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்த உச்சநீதிமன்றம், மே மாதம் 12ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

ஜெயலலிதாவின் எதிர்கால அரசியல் வாழ்வை நிர்ணயம் செய்யும் தீர்ப்பு என்பதால் இன்றைய தீர்ப்பு நாடெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஐகோர்ட்டை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோர்ட்டு வளாகப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. என்றாலும் வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் அங்கு பரபரப்புடன் காணப்பட்டனர். சரியாக 10.03 மணிக்கு கர்நாடகா ஐகோர்ட்டு அறை எண். 14க்கு நீதிபதி குமாரசாமி வந்தார்.

கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பில் அவரது வக்கீல்கள் ஆஜரானார்கள். நீதிபதி குமாரசாமி 11.05 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். சிறப்புக் கோர்ட்டு நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி ரத்து செய்வதாக அறிவித்தார். அதோடு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்வதாக குமாரசாமி அறிவித்தார். இந்த பரபரப்பு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒரே வரியில் வாசித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உடனே ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் நீதிபதி குமாரசாமிக்கு மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். உடனடியாக ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. முக்கிய சாலைகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து பட்டாசுகள் வெடித்தனர்.

‘‘நீதி வென்றது’’ என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷமிட்டனர். தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டோடியது. ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பதன் மூலம் அவரது அரசியல் எதிர்கால வாழ்வு மேலும் வெற்றிகரமாகவும், சாதனைகள் மிக்கதாகவும் மாறும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதா இந்த வழக்கில் இருந்து விடுதலையானதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் நிரபராதி என்ற வெற்றியை பெற்றுள்ளார். அவர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருந்த தடைகள் நீங்கி விட்டன. எனவே ஜெயலலிதா விரைவில் முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.may-18-123

இன்றைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் திமுக தலைவர் மு கருணாநிதி, நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் என்று ஒன்று இருக்கிறது; அதுதான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம்; அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது என்று தெரிவித்திருக்கிறார்.

இன்றைய தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கர்நாடக அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா இன்றைய தீர்ப்பே இறுதித் தீர்ப்பல்ல; இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் “அப்பீல்” செய்யும்“ என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, இன்று சொல்லப்பட்டிருப்பது இறுதி தீர்ப்பல்ல என்றும், “நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதி மன்றம். அது அனைத்து நீதி மன்றங்களுக்கும் மேலானது” என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத் தான் இப்போது எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன், என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தமக்கு நினைவுக்கு வருவதாக தெரிவித்திருக்கும் கருணாநிதி, 29-1-2015 அன்று விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, “சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை” என்று கூறினார். நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் இப்போது அவிழ்க்கப்பட்டு அவிழ்க்கப்பட்டு விட்டனவா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*