வவுனியா, பேயாடி கூழாங்குளம் காணியினை எமது கிராமத்திற்கே வழங்காது விடின் தற்கொலை செய்வோம்:கிராம மக்கள்

வவுனியா, பேயாடி கூழாங்குளம் காணியினை எமது கிராமத்திற்கே வழங்காது விடின் தற்கொலைnew-Gif செய்வோம் என அக் கிராம மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இக் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை தொடர்பில் அப் பகுதி மக்கள் மற்றும் திருமறைக் கலாமன்றத்தினருடன் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

வவுனியா, நொச்சி மோட்டை, பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள பொதுத் தேவைக்கான நிலத்தினை வவுனியா பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும் அதனை மீட்டுத் தருமாறு கோரி பேயாடி கூழாங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அண்மையில் செய்திருந்தனர்.

குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய அப் பகுதி மக்கள் தடையாக இருப்பதாக தெரிவித்து திருமறைக் கலாமன்றத்தினரால் பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடான நிலமை காணப்பட்டது.

இதனையடுத்து இரு பகுதியினரும் இது தொடர்பில் வடமாகாண சுகாதார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இரு பகுதியினரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.may-18-final-benar

இதன் போது கருத்துத் தெரிவித்த திருமறை கலாமன்றத்தினர், குறித்த காணி தமக்கு பல மாதங்களுக்கு முன்னரே பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் அதில் முன்பள்ளி மற்றும் கலா மன்றம் ஆகியவற்றை வெளிநாட்டு சமய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காணியினை வழங்கிய போது அப் பகுதி மக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை எனவும் தற்போது அடிக்கல் நாட்டா திகதி குறிப்பிட்ட பின்னரே மக்கள் காணி தர மறுப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் கலைகளை அழியவிடாது பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தமக்கு ஒதுக்கப்பட்ட காணியை தமது தேவைக்கு ஏற்ப தந்துவிட்டு மிகுதியை அப் பகுதி மக்களின் பொது தேவைக்கு எடுக்குமாறும் கோரினர்.

இதன் போது கருத்து தெரிவித்த அப் பகுதி மக்கள், தமது கிராமத்தின் ஒரு பகுதி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பாடசாரல கூட தற்போது வேறு ஒரு கிராமத்தில் இயங்குகிறது. தமது கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி, மற்றும் பொது கட்டிடங்களைக் கட்டுவதற்கு வேறு காணி இல்லை. இக் காணியை திருமறைக் கலாமன்றத்திற்கு வழங்கினால் தமது பொதுத் தேவைகளுக்கான கட்டடங்களை எங்கு அமைப்பது. திருமறைக் கலாமன்றத்திற்கு வேறு இடத்தில் காணி வழங்க முடியும்.

ஆனால் எமது கிராமத்தை வேறு இடத்தில் உருவாக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியதுடன், இக் காணியினை பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றத்திற்கு வழங்கியது தமக்கு தெரியாது எனவும் இரு பகுதியினரும் தமக்கு இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் அப் பகுதி மக்கள் கூறினர்.

அத்துடன் தமது பழமையான கிராமத்திற்கான இந்தக் காணியினை தமது கிராமத்திற்கு வழங்காது விடின் தற்கொலை செய்வோம் எனவும் கூறினர். இது தவிர, அப் பகுதி கிராம அலுவலர் சில காணிகளை பிடித்து வேலி அடைத்து வைத்துள்ளார். அதனை விற்பனை செய்யவும் முயற்சிகள் இடம்பெறுகிறது. அதனையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு அமைச்சரிடம் கோரினர்.

இதனையடுத்து குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்க்க முடியும் எனவும் இது தொடர்பில் தாம் கலந்துரையாடுவதாகவும் அவர் இரு பகுதியினரிடமும் தெரிவித்தார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*