ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி பெங்களூருவில் பரபரப்பு

நாளை ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி பெங்களூருவில்new-Gif பரபரப்பு நிலவுகிறது. அதிக அளவில் அதிமுகவினர் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக நிலைமை வேறாக இருக்கிறது. பொது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு செபடம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்ட போதே பல இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள்,பேருந்துகள் உடைப்பு என்று தமிழகம் அமைதி இழந்து இருந்தது.அதனால் நாளையும் பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதனால் நாளைக்கு என்ன தீர்ப்பு வருமோ என்று அதிமுகவினர் மத்தியில் குழப்பம் கலந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் போயஸ்கார்டன் முதல் பெங்களூரு வரை அதிமுகவினர் மொய்த்து வருகின்றனர். ஞாயிறு விடுமுறை என்பதால் பெங்களூர் நீதி மன்றத்தில் அமைதி நிலவுகிறது.

நீதிமன்ற வளாகத்தின் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் நீதி மன்றத்திற்கு வெளியே நடக்கும் பணிகளுக்கு எந்த தங்குதடையும் இல்லை. பாதுகாப்பிற்காக பேரிகார்டுகள் வந்திறங்கியவண்ணம் இருக்கிறது. போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூருவின் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் அதிமுக கரை வேட்டிகள் பளிச்சிடுகின்றன. இப்படி பரபரப்பாக இருக்கிறது பெங்களூரு.may-18-123

இன்று காலை பெங்களூரு கூடுதல் ஆணையர் அலோக்குமார், பாதுகாப்பு பணிகளை அதிகப்படு த்தியிருப்பதாகத் தெரிவித்தார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த அலோக்குமார் “நாளை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் 1,150 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கென 10 பட்டாலியன்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பெங்களூருவில் எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கர்நாடக அதிமுகவினரிடமும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

நேற்றுவரைக்கும் 550 காவலர்கள்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்திருந்தார்கள் இன்றைக்கு திடீரென்று பாதுகாப்பு பணியை அதிகரித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*