இங்கிலாந்து இளவரசரிடம் உதட்டில் முத்தம் கொடுக்க வந்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்று இருந்தார். new-Gifஒரு மாத பயிற்சியை முடித்து கொண்டு கிளம்பும் வேளையில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியிடம் உதட்டில் முத்தம் கொடுக்க முன் வந்தார். அதை சுதாரித்து கொண்ட ஹாரி அந்த பெண்ணிடம் விலகி சென்று விட்டார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. நாடு திரும்பவதற்கு தயாரான இளவரசர் இங்கிலாந்து கிளம்பும் முன் ,சிட்னி ஓபரா ஹவஸில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்றார்.

அப்போது ராணுவ உடையில் இருந்த ஹாரியை 21 வயதுடைய விக்டோரியா மெக்ரீ என்ற பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு ஒரு பிளாக்கார்டில் எழுதி அவரிடம் காட்டி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். அதனை தொடர்ந்து ஒரு முத்தமாவது கொடுக்கலாமா என்று கேட்டதற்கு இளவரசர் ஹாரி சரி என்றும் ஒத்துக்கொண்டார் ஆனால் கன்னத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் வைத்தார். இளவரசர் மீது கொண்ட அன்பினால் விக்டோரியா மெக்ரீ இளவரசர் கன்னம் காண்பிக்கும் போது அவரின் உதட்டில் முத்தம் கொடுக்க முனைந்தார்.may-18-final-benar

இதை அறிந்து கொண்ட இளவரசர் சுதாரித்து கொண்டு அந்த பெண்ணிடம் இருந்து நைசாக நழுவிட்டார். பொது இடத்தில் இங்கிலாந்து இளவரசரிடம் உதட்டில் முத்தம் கொடுக்க வந்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*